கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பாரம்பரிய உணவுகளை இலவசமாக வழங்கும் உணவகம்!

இந்தியாவில் 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,

By leena | Published: Mar 22, 2020 09:00 AM

இந்தியாவில் 250-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு இதனை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, கடலூர் மற்றும் புதுவை ஆனந்தபவன் குரூப் சார்ப்பில் மக்களுக்கு இலவசமாக பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதனை ஆனந்தபவன் குரூப் உரிமையாளர்கள் நாராயணன், ராம்கி நாராயணன் ஆகியோர் வழங்கி வருகிறார்கள். ஹோட்டல் ஆனந்த பவனுக்கு வரக்கூடிய பொதுமக்கள் பாரம்பரியமான உணவுப்பொருட்களை ஆர்வமுடன் கேட்டு வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். தமிழர் பாரம்பரிய உணவுப் பொருட்களான சுக்கு காபி, மிளகு, வெற்றிலை, துளசி ஆகியவற்றை இலவசமாக பொது மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி வருகின்றனர். 

Step2: Place in ads Display sections

unicc