ஷூட்டிங் ஆரம்பிக்காத பொன்னியின் செல்வன் பட வேலையினை ஆரம்பித்த இசைப்புயல்!

மணிரத்னம் அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க

By Fahad | Published: Apr 02 2020 08:29 AM

மணிரத்னம் அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க உள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் என பலர் நடிக்க உள்ளனர் என தகவல் வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். வைரமுத்து பாடல்களை எழுத உள்ளார். தோட்டா தாரணி கலை இயக்குனராக பணியாற்ற உள்ளார் என தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இப்படத்திற்க்காக வைரமுத்து 12 பாடல்களை எழுத உள்ளார் என நேற்று செய்தி வந்தது. மேலும் தற்போது கூடுதல் தகவலாக இப்படத்திற்கு இசையமைப்புக்கான வேலையை ஏ.ஆர்.ரகுமான் தொடங்கிவிட்டாராம். டிசம்பரில் இப்பட ஷூட் ஆரம்பமாக உள்ளதாம்.