தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை குறித்த புதிய அப்டேட்….!!!

  • நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை குறித்த புதிய அப்டேட்.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் பல சாதனைகளை படைத்து, பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்த படம் வெளியாகி பல வாரங்கள் ஆனாலும், இன்னும் திரையரங்குகளை கலக்கி கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், விஸ்வாசம் படத்தை தொடர்ந்து, நேர் கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த படம் மே.1ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியானது. இதனையடுத்து   இந்த படம் மே.23ம் தேதி வெளியாகும் என படக்குழுவின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment