தன்னை நம்பி வந்த காதலியை கொலை செய்த காதலன்!

கரூர் மாவட்டம் கேத்தம்பட்டியைச் சேர்ந்த பாண்டியின் மகள் முத்தரசி ஆவார்.இவர்

By sulai | Published: Aug 03, 2019 02:23 PM

கரூர் மாவட்டம் கேத்தம்பட்டியைச் சேர்ந்த பாண்டியின் மகள் முத்தரசி ஆவார்.இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார்.இவரது சகோதரி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வசித்து வருகிறார். இதனால் அவரை பார்க்க அடிக்கடி சென்று வந்துள்ளார்.அப்போது அவருக்கு அங்குள்ள பரத் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முத்தரசி மாயமாகியுள்ளார். இதன் காரணமாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.அப்போது முத்தரசியை பரத்துடன் அடிக்கடி பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் பரத்தை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது பரத் முத்தரசியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வீட்டைவிட்டு வருமாறு கூறியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் வார்த்தையை நம்பி முத்தரசியும் தனது வீட்டைவிட்டு வெளியேறி வந்துள்ளார்.பின்னர் அவரை பரத் ஆத்துக்கால்புதூருக்கு அழைத்து வந்து தனது பெற்றோருக்கு தெரியாமல் ஒரு வீடு எடுத்து தங்கவைத்துள்ளார். பின்னர் பரத்துக்கு அவரின் பெற்றோர் வேறொரு இடத்தில் பெண் பார்த்துள்ளனர்.பரத்துக்கும் அந்த பெண்ணை பிடித்ததால் முத்தரசியை கழட்டிவிட நினைத்து அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.ஆனால் முத்தரசியோ அவரை விட்டுவிலகுவதாக இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பரத் முத்தரசியை தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துள்ளார்.பின்னர் பயத்தில் என்னசெய்வது என்று தெரியாவில் தனது பெற்றோரிடம் கூறியுள்ளனர். வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் முத்தரசியின் உடலை வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்துள்ளனர்.பின்னர் சில நாட்கள் கழித்து, அதனை மீண்டும் தோண்டியெடுத்து வேறு ஒரு இடத்துக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர் பார்த்த பெண்ணுடன் பரத்துக்கு திருமணம் நடந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.இதையடுத்து பரத் அவனது தாய் லட்சுமி மற்றும், உடலை எரிக்க உதவியதாக கோவிந்தன் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். பின்னர் பரத்தின் தந்தை உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றன.
Step2: Place in ads Display sections

unicc