10 வாக்குகள் மட்டுமே பெற்று ஊராட்சி மன்ற தலைவரான பெண்!

  • தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 
  • தூத்துக்குடி மாவட்டத்தில் பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவராக 10 வாக்குகள் மட்டுமே பெற்று ராஜலக்ஷ்மி என்பவர் வெற்றிபெற்றுள்ளார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, 28 மணிநேரத்தை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவர் பதவியானது பட்டியலினத்தவர்களுக்கு ஓதுக்கப்பட்டது. இதனால், அங்குள்ள வேற்று சாதியினர் இந்த தேர்தலை புறக்கணித்தனர். இதனால், அந்த ஊராட்சியில் இருந்த 6 வார்டு  உறுப்பினர் பதவிகளுக்கும் யாரும் போட்டியிடவில்லை.

இதனால் பட்டியலினத்தை சேர்ந்த ராஜலக்ஷ்மி மற்றும் சுந்தரி என இரு பெண்கள் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் 13 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. அதில் 10 வாக்குகள் பெற்று ராஜ லட்சுமி பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்றுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.