ஒரு கிலோ மனோகரி கோல்ட் தேயிலை விலை ரூ.50,000!

அசாம் தேயிலை தோட்டங்களில் பயிராகும் அரியவகை தேயிலை தான் மனோகரி கோல்ட். இந்த மனோகரி கோல்ட் தேயிலை இலைகள் தங்க நிறத்தில் இருப்பதால் இந்த தேயிலைக்கு தனி மவுசு உள்ளது.Image result for Manohari Gold Tea

இந்த தேயிலை நல்ல விளைச்சல் ஆகுவதற்கு சீதோஷ்ண நிலை வேண்டும். ஆனால் இந்த வருடம் சீதோஷ்ண நிலை இல்லாததால் மனோகரி கோல்ட் தேயிலை குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தேயிலை சிறிய மொட்டிகளில் இருந்து பெறப்படுவதால் இதை தயாரிப்பதில் சற்று கடினம்.இந்நிலையில் இந்த மனோகரி கோல்ட் தேயிலை ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50,000 வரை ஏலம் போனது.கடந்த ஆண்டு மனோகரி கோல்ட் தேயிலை ஒரு கிலோ ரூ.40,000 வரை ஏலம் சென்றது.

Image result for Manohari Gold Tea

பொது ஏலத்தில் மனோகரி கோல்ட் தேயிலை ஒரு கிலோ ரூ.50,000 சென்றது இதுவே முதல் முறை என ஏல மையத்தின் செயலர் தினேஷ் பிஹானி கூறியுள்ளார்.இதுகுறித்து தேயிலை தோட்ட அதிபர் ராஜன் லோஹியா கூறுகையில் ,நான் இரண்டு கிலோ மனோகரி கோல்ட் தேயிலை கொண்டு வந்தேன்.

அதில் ஒரு கிலோவை ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.40,000 கொடுத்தேன்.மீதி இருந்த ஒரு கிலோவை100 கிராமை ரூ.8,000 கொடுத்தேன் என கூறினார்.

author avatar
murugan