வெள்ளத்தால் பாதித்த ஆந்திரா.. சேத பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் ஜெகன் மோகன்…

வெள்ளத்தால் பாதித்த ஆந்திரா.. சேத பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் ஜெகன் மோகன்…

வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று சேத பாதிப்பை பார்வையிட்டார்.

 வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது  தீவிரமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடாக்கு  அருகே ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால், அப்பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்தது.

எனவே விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் உள்ள  சாலைகள் சேதமடைந்தன. அதேபோல், மின் வினியோக கட்டமைப்பு முற்றிலும் சேதமடைந்தது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமடைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள், வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில், ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று சேத பாதிப்பை பார்வையிட்டார்.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube