திருவள்ளுவா் சிலையின் பாதத்தை தொட்டு வணங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

திருவள்ளுவா் சிலையின் பாதத்தை தொட்டு வணங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் ஆல்ரவுண்டருமான ஷேன் வாட்சன் தமிழகத்தில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் வீரா்ளை உற்சாகப்படுத்துவதற்காக தமிழகத்திற்கு வந்துள்ளாா். மேலும் வாட்சன் உடன் பல வெளிநாட்டு வீரா்கள் வந்து உள்ளனர். நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடந்த முதலாவது தகுதிச்சுற்றில் வாட்சன்  வீரா்ளை உற்சாகப்படுத்தினார்.முதல் தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன் மற்றும்  சேப்பாக் சூப்பா் கில்லிஸ் ஆகிய அணிககள் மோதியது. இப்போட்டியில் சேப்பாக் சூப்பா் கில்லிஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புள்ளி அடிப்படையில் திண்டுக்கல் டிராகன் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றது. போட்டி முடித்த பிறகு ஷேன் வாட்சன் திருநெல்வேலியில் இருந்து காா் மூலம் கன்னியாகுமாி உள்ள திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் மண்டபத்துக்கு சென்றாா். வாட்சனை திருவள்ளுவா் சிலையை வடிவமைத்த வல்லுனா்களில் ஒருவரான ராஜீ வரவேற்றாா். திருவள்ளுவா் சிலையை பார்த்த ஷேன் வாட்சன் திருவள்ளுவா் சிலையின் பாதத்தை தொட்டு வணங்கினாா். பின்னர் விவேகானந்தா் மண்டபத்தில் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டாா்.  

Latest Posts

மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் திமுக தலைவர்!
#KXIP vs SRH: பஞ்சாப்பை வீழ்த்துமா ஹைதராபாத்...!
76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்! என்ன தெரியுமா?
இன்றைய முட்டை விலை..!
யார் யாரு என்னென்ன பேசுறீங்கன்னு நெற்றியில் அடித்தது போல சொல்லுவேன்!
மிலாதுன் நபி: இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்! பிரதமர் மோடி ட்வீட்!
ஒரு லட்சம் செலவுப்பா...அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க..ரீலிஸ் பண்ணுங்க...
சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு
Airtel வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி
இந்தியாவில் 80 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - அதிகரிக்கிறதா கொரோனா தொற்று!