மது போதையில் சொத்து கேட்டு ரகளை செய்த மகனை தாறுமாறாக அடித்து கொன்ற தந்தை.!

திருச்செங்கோடு அருகே மகனை அடித்து கொன்ற தந்தை காவல் நிலையத்தில்

By balakaliyamoorthy | Published: Dec 15, 2019 06:23 PM

  • திருச்செங்கோடு அருகே மகனை அடித்து கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
  • மது போதையில் அருகில் இருப்பவரை துன்புறுத்துவது மற்றும் சொத்து கேட்டு தகராறு செய்த மகன்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி உட்பட்ட தொண்டிகரடு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மணியின் மகன் அரவிந்த், இவர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தகராறு செய்துள்ளார். அதுமட்டுமின்றி மதுபோதையில் அருகில் உள்ள வீட்டாருடன் சண்டை போடுவது துன்புறுத்துவது போன்ற செயல்கள் செய்து வந்தார். பின்னர் இதையெல்லாம் சகித்து கொண்டு அமைதியாக இருந்த தந்தையை அடித்து துன்புறுத்தியதோடு, மட்டுமில்லாமல் சொத்தை பிரித்து தருமாறு அரவிந்த் ரகளை செய்துள்ளார். இந்நிலையில் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஆத்திரம் அடைந்த தந்தை, மகனை அடித்து கொன்றுவிட்டு, பின்பு அவர் தானாகவே திருச்செங்கோடு் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
Step2: Place in ads Display sections

unicc