கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று கட்டிலுக்கடியில் புதைத்த மனைவி!

ஒன்றாக மது அருந்திவிட்டு, கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று கட்டிலுக்கடியில் புதைத்த மனைவி மற்றும் காதலன் கைது.

கொல்கத்தாவின் வடக்கிலுள்ள பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயதுடைய பெண்ணான ஸ்வப்னா என்பவர் அவரது காதலன் சுஜித் தாஸ் என்பவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூங்கில் தண்டின் கீழ் இரத்தக்கறை காணப்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய கிராமவாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  இழுபட்டு சென்றது போன்று அடையாளம் இருப்பதால் அதை நோக்கி சென்றுள்ளனர். ஆனால், அடையாளம் தெரியவில்லை எனவே சந்தேகத்திற்கிடமான ஏதேனும் தென்பட்டால் தெரிவிக்குமாறு கூறிவிட்டு போலீசார் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஒரு பூட்டப்பட்ட வீட்டின் முன்பதாக இரத்த கறைகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த வீட்டை உடைத்து பார்த்தபோது படுக்கையின் கீழ் மணல் குவிக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அதன்பின் அங்கு சோதனை மேற்கொண்ட போது அங்கு ஒரு சடலம் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலத்தை எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தபோது அதில் பல குத்துக் காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த பொழுது 42 வயதான ராமகிருஷ்ணா சர்கர் என்பவர்தான் இந்த உயிரிழந்த சடலம் என கிராமவாசிகள் அடையாளம் கண்டு கூறியுள்ளனர்.
விசாரணையில் ராம் கிருஷ்ணாவின் மனைவிக்கு சுஜித் என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததால் சம்பவத்தன்று ராமகிருஷ்ணா ஸ்வப்னா சுஜித் ஆகிய மூன்று பேருமே ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பின்பு கள்ளக்காதலனுடன் இணைந்து தனது கணவரை  ஸ்வப்னா கொலைசெய்து கட்டிலுக்கு அடியில் புதைத்தது தெரிய வந்துள்ளது. கள்ளக்காதலன் சுஜித் மற்றும் ஸ்வப்னாவை போலீசார் கைது செய்துள்ளனர். 
author avatar
Rebekal