புல்வாமா தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டவர்க்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

புல்வாமா தாக்குதல் குற்றம் சாட்டப்பட்டவர்க்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யூசுப் சோபனுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.சோபன் கைது செய்யப்பட்டதிலிருந்து  சுமார் 180 நாட்களாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,  புல்வாமா தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையம் இதுவரை குற்றப்பத்திரிகையை  தாக்கல் செய்யவில்லை என்றும் அதை தாக்கல் செய்வதற்கான நேரம் கடந்துவிட்டதாகவும் சோபன்  வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து விசாரித்த சிறப்பு என்ஐஏ நீதிபதி பர்வீன் சிங், கடந்த வாரம் ஒரு உத்தரவில், சோபனிடம் ரூ .50,000 தனிப்பட்ட பத்திரத்தை ஒரு ஜாமீன் பத்திரத்துடன் வழங்குமாறு கேட்டுக்கொண்டு விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என உத்திரவுவிட்டு ஜாமீன் வழக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube