பெற்றோர் சண்டையால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த மகள்..காப்பாற்ற சென்ற அண்ணனும் பலி..!

  • பெற்றோர்கள் சண்டை போட்டதால் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட

By Fahad | Published: Apr 02 2020 07:49 PM

  • பெற்றோர்கள் சண்டை போட்டதால் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட மகள்.
  • காப்பாற்ற சென்ற அவளின் அண்ணனும் நீச்சல் தெரியதால் இறந்தார்.
கோவை அருகே உள்ள போடிபாளையத்தில் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் முத்துசாமி-வேலுமணி என்ற தம்பதி தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு அருண்குமார் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உண்டு. முத்துசாமி-வேலுமணி தம்பதி இடையே அடிக்கடி சண்டை நடக்கும். சண்டை நாடாகும் போதெல்லாம் அவரின் மகன் மற்றும் மகள் சமாதானப்படுத்துவர். இதனைதொடர்ந்து, நேற்று நள்ளிரவிலும் இவர்கள் சண்டையிட்டனர். இவர்களை சித்ரா சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, அங்கிருந்த கிணற்றில் சித்ரா குதித்துள்ளார். இதனை பார்த்த அருண்குமார், சித்ராவை காப்பாற்ற அவனும் கிணற்றிற்குள் குதித்தான். நீச்சல் தெரியாத காரணத்தினால், இருவருமே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.