ஊழல் இல்லாத ஆட்சியா ! காமெடி பண்ணாதீங்க முதல்வரே! - குஷ்பு கிண்டல்!

ஊழல் இல்லாத  ஆட்சியை நீங்கள் தரப்போறிங்களா ! காமெடி பண்ணாதீங்க சார்  என்று

By dinesh | Published: Jul 19, 2019 08:09 PM

ஊழல் இல்லாத  ஆட்சியை நீங்கள் தரப்போறிங்களா ! காமெடி பண்ணாதீங்க சார்  என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்விட் செய்துள்ளார். முதல்வர் பழனிசாமி எங்கு பேசினாலும் நீதி,நேர்மை,நியாயம், தர்மம், என்று கூறி பேச தொடங்குவது வழக்கம் . அதே போல் ஊழல் இல்லாத ஆட்சி என்று பேச தொடங்குவார். சென்ற வாரம் சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி பல்கலையில் தமிழகம் நீதி நேர்மையோடு இருக்கும் மாநிலம் என்றும் நீதிக்கு தலை வணங்கும் மாநிலம் என்றும் கூறி புகழ்ந்து இருந்தார். இந்நிலையில் இன்று அது தொடர்பாக குஷ்பு ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், முதல்வர் பேசுவதை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் நீதி, நேர்மை, ஊழல் இல்லாத ஆட்சி ...ஏன் சார் காமெடி பன்றிங்க. ஒரு முதல்வர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு நீங்கள் தான் சிறந்த உதாரணம் என்றும் நீங்கள் ஒன்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் அல்ல என்றும் மக்களின் மீது திணிக்கப்பட்ட முதல்வர் என்றும் குஷ்பூ கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc