2,200 கி.மீ தூரம் சைக்கிளில் “புனித யாத்திரை” மேற்கொண்ட 68 வயது மூதாட்டி!

2,200 கி.மீ தூரம் சைக்கிளில் புனித யாத்திரை மேற்கொண்ட 68 வயது மூதாட்டி.

மஹாராஷ்டிராவை சேர்ந்த 68 வயது மூதாட்டி ரேகா தேவ்பங்கர். இவர் வைஷ்ணவி தேவி மீது அதீத பக்தி கொண்டவர். இவர் கடந்த ஜூலை 24-ம் தேதி இமயமலையில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சைக்கிளில் புனிதயாத்திரை மேற்கொண்டார்.  நாள்தோறும் 40 கி.மீ தூரம் கடந்து, தற்போது 2,200 கி.மீ தூரம் பயணம் செய்து புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

சைக்கிள் ஒட்டி செல்லும் இந்த மூதாட்டியை, ட்வீட்டர் பயனாளர் ரத்தன் ஷ்ர்தா, அவரை சந்தித்து நலம் விசாரித்தார். அவர் தான் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்வதாக கூறியுள்ளார். இதனை வீடியோ எடுத்த ஷர்தா, அந்த வீடியோவை, இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைஷ்ணவி தேவி கோயிலானது, ஜம்மு பகுதியில், இமயமலையில், 5,200கி.மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வருடந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இது ஒரு குகை கோயில் ஆகும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.