வகுப்பறையில் வலிப்பு வந்து இறந்த 9-ம் வகுப்பு மாணவி.!

சென்னாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த நிவேதினி 

By murugan | Published: Jan 23, 2020 08:58 PM

  • சென்னாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த நிவேதினி  என்பவர் வகுப்பறையில் இருக்கும் போது மயங்கி விழுந்துள்ளார்.
  • மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள  லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் நிவேதினி (14) இவர் சென்னாங்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை நிவேதினி வகுப்பறையில் இருக்கும் போது மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து விட்டு கே.வி குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மாணவி மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் இறப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில் , தங்கள் மகளுக்கு வலிப்பு வந்ததாக கூறி பள்ளியிலிருந்து தகவல் கிடைத்தது. பின்னர் நாங்கள் அங்கு விரைந்து சென்றோம். மேல்சிகிச்சைக்காக வேலூர் கொண்டு செல்லும்போது நிவேதினி இறந்துவிட்டார்.மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே எங்கள் மகள் இறப்புக்கான காரணம் தெரியும்..? என கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc