இதுவரை சிறப்பு ரயிலில் பயணித்த 97 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு - ரயில்வே அமைச்சர்

இதுவரை சிறப்பு ரயிலில் பயணித்த 97 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு - ரயில்வே அமைச்சர்

சிறப்பு ரயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் 97 பேர் இதுவரை இறந்துள்ளார்கள் என்று ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், விவாதத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், ஷார்மிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார். ஏன்னென்றால், ஊடகங்களில் 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்ததாக தகவல் வெளியாகியிருந்தது என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், இதுவரை சிறப்பு ரயிலில் பயணம் செய்த 97 பேர்  இறந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் அந்தந்த மாநில காவல்துறையிடமிருந்து பெறப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும், ஷார்மிக் ரயிலில் பயணம் செய்யும்போது உணவு மற்றும் குடிநீர் கிடைக்கவில்லை என்று 113 பேர் புகார் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Latest Posts

#BREAKING : 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்  தீர்ப்பு
பென் ஸ்டோக்ஸ் சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்ற RR..!
உலகின் பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara.. இதுதான் புதிய அதிவேக கார்!
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி!
ரூ.2.50 கோடி நகை கொள்ளையில் ஒருவர் கைது..!
அவர்கள் அடித்த சிக்ஸர்களை நான் ரசித்தேன்- ஹர்திக் பாண்டியா..!
முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும்! பாஜக-வுக்கு சவால் விடுக்கும் உத்தவ் தாக்கரே!
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு..?
அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன் - மு.க.ஸ்டாலின்
#Breaking: வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!