டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிறகும் சென்னை தியேட்டரில் 100வது நாளை கொண்ணடாடிய 96!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் அக்டோபரில் வெளியான திரைப்படம் 96. இந்த படத்தை பிரேம் குமார் என்பவர் இயக்கி இருந்தார். மெடராஸ் என்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்திருந்தார். கோவிந்த் வசந்தா என்பவர் இசையமைத்து இருந்தார்.

இந்த படம் வெளியாகி காதலில் ஜெயித்தவர்கள், தோற்றவர்கள், காதலிக்காதவர்கள் என அனைவருக்கும் தங்களது பள்ள கால காதலையும், நினைவுகளையும் கண்முன்னே கொண்டு வந்தது.

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தும் இப்படம் 36வது நாளே டிவியில் ஒளிபரப்பானது. இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இருந்தும் பல ஊர்களில் நன்றாக ஓடியது. இப்படம் தற்போது சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் 100வது நாளை கொண்டாடி உள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment