95 நிமிடம் விளையாடி டக் அவுட்..! வெஸ்ட் இண்டீஸ் வீரரின் புதிய சாதனை !

இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி  நடைபெற்று வருகிறது.  முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து  297 ரன்கள் எடுத்தது. பின்னர் இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழந்து 189 ரன்கள் எடுத்து இருந்தது.

களத்தில் கேப்டன் ஹோல்டர் 10 ரன்னுடனும் , கம்மின்ஸ்  ரன் எடுக்காமலும் களத்தில் நின்றனர். பின்னர் நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

ஹோல்டர் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இப்போட்டியில் கம்மின்ஸ்  95 நிமிடங்கள் களத்தில் நின்று 46 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்கவில்லை, பிறகு ஜடேஜா வீசிய சுழல் பந்தில் போல்டானார்.

இதற்கு முன்  1999-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து வீரர் ஜெஃப் அலாட் 101 நிமிடங்கள் களத்தில் நின்று  ஒரு ரன் கூட எடுக்காமல் இந்த சாதனையை செய்து இருந்தார்.அடுத்த இடத்தில் கம்மின்ஸ் உள்ளார்.

author avatar
murugan