அமெரிக்காவில் 95 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தை நெருங்கியது. 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இதனையடுத்து, உலக நாடுகள் இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை உலக அளவில், 5,085,504 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 329,731 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. 

இந்த வைரஸ் தாக்கத்தால், அமெரிக்காவில் நாளுக்குநாள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இதுவரை அமெரிக்காவில், 1,591,991 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 94,994 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நேற்று மட்டும் 1,491 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.