இன்று 9 நிமிடங்கள் விளக்குகளை அணைக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்

இன்று 9 நிமிடங்கள் விளக்குகளை அணைக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனா நோய்க்கு எதிராக நாம் ஒற்றுமையாக இருப்பதை இன்று  இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து தீபம், மெழுவர்த்தி ஏற்றி ஒளிர விட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதற்கு இடையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.அதில் ,ஏப்ரல் 5-ம் தேதி (அதாவது இன்று ) இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.

வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் .வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்று வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.

எனவே  தமிழக மின்சார வாரியம் ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் மின்சாரம் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்பதால் சில நடவடிக்கைகளை எடுத்தது.அதாவது,இன்று  இரவு அனைத்து செயற்பொறியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும் சரியாக 9 மணிக்கு மின்சாரம் சரியான அளவில் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தது.தமிழகத்தில் இன்று  இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை வீட்டின் மின் விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும் என்றும் இதர மின்சாதனங்களை அணைக்க வேண்டாம் என்றும் மின்சாரவாரியம் தெரிவித்தது.  

மேலும்  இன்று இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைக்கும் போது தெருவிளக்குகளை நிறுத்தக்கூடாது. மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசியமான இடங்களில் விளக்குகளை அணைக்கக் கூடாது ,, ஒவ்வொரு தெருவிலும் விளக்குகள் எரியும் என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்வது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெழுகுவர்த்தி, அகல்விளக்கை ஏற்றுவதற்கு முன் ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதில் கைகளை சோப்பு போட்டு மட்டும் கழுவி விட்டு, பின்னர் விளக்கேற்றும்படி இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube