ஒரே ஆண்டில் 9 மருத்துவக்கல்லூரிகள் என்பது வரலாற்று சாதனை – அமைச்சர் விஜயபாஸ்கர்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி சவுபேவை  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்தார்.அப்பொழுது  நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு ஒரே ஆண்டில் 9 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
இதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ஒரே ஆண்டில் 9 மருத்துவக்கல்லூரிகள் என்பது வரலாற்று சாதனை ஆகும் . முதல்வர் பழனிசாமியின் நிர்வாக திறமைக்கு இது சான்று . வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட உள்ளன  என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.