பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் முறையை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்…

புதுடில்லி: பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் முறையை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் நாடு முழுவதும் சர்வதேச தரத்திலான 20 வெளிநாட்டுமற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டாய தேர்ச்சி: முதல் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்யும் திட்டம், தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனையடுத்து கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. ஒப்புதல்: இந்நிலையில் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று(ஆக.,2) நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், நாடு முழுவதும் சர்வதேச தரத்திலான 20 கல்வி நிறுவனங்களை அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுதொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan

Leave a Comment