வெளியூர் பயணத்துக்காக 8000 பேர் விண்ணப்பம் – 111 பேர் மட்டுமே அனுமதி!

வெளியூர் பயணத்துக்காக 8000 பேர் விண்ணப்பம் – 111 பேர் மட்டுமே அனுமதி!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். நாடு முழுவதுமே முக்கியமான அனைத்து இடங்களும் பூட்டப்பட்டுள்ளது. பால் சப்ளை மருத்துவம் மற்றும் சில கடைகள் மற்றும் குறிப்பிட்ட நேரம் அனுமதியுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேவையில்லாமல் தடையை மீறி வாகனங்களில் வெளியில் செல்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது வெளியில் அவசர தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் இமெயில் மூலமாக தெரிவிக்கலாம் என அண்மையில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை அவசர தேவைக்கான பயணமாக 8000 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களில் 111 பேரின் வெளியூர் பயணத்துக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube