ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு 8 பேர் தேர்வு! ஜூலை 23-ல் நேர்காணல்!

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு 8 பேர் தேர்வு.

என்.எஸ்.விஸ்வநாதன் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பணிபுரிந்து வந்தார். இவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்ட காலம் முடிவடைவதற்கு முன்பதாகவே, மார்ச்-3ம் தேதி இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, காலியான பணியிடத்துக்கு, துணை ஆளுநரை நியமிப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, நிதித்துறை நியமனங்களுக்கான தேடல் குழு, 8 பேரின் பெயர்களை இறுதி செய்துள்ளது. இவர்களுக்கு, வரும் 23-ம் தேதி காணொளி வாயிலாக நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. இந்த குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நபரின் பெயர், இறுதி ஒப்புதலுக்காக பிரதமர் தலைமையில் இயங்கும் நியமனங்களுக்கான அமைச்சரவை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அந்த குழுவின் ஒப்புதலுக்கு பின் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.