சங்ககாராவிடம் 8 மணிநேரம் விசாரணை.. போராட்டத்தில் குதித்த ஆதரவாளர்கள்.!

சங்ககாராவிடம் 8 மணிநேரம் விசாரணை.. போராட்டத்தில் குதித்த ஆதரவாளர்கள்.!

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 27 வருடம் கழித்து வெற்றி பெற்று  கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக  இலங்கை முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள இலங்கை சிறப்பு புலனாய்வு பிரிவினர் உலகக்கோப்பை போது  தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த இலங்கை பேட்டிங் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா மற்றும் அந்த போட்டியின் தொடக்க பேட்ஸ்மேன் உபுல் தரங்கா ஆகியோரின் அறிக்கைகளையும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில்,  கடந்த  2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்த சங்கக்காரா மற்றும்  ஜெயவர்த்தனே ஆகியோரிடம் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டு சுமார் 8 மணித்திற்கு மேலாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.

இவர்களிடம் விசாரணை நடத்தும்போது விளையாட்டு அமைச்சக அலுவலகத்தின் வெளியே, சங்கக்காரா மற்றும்  ஜெயவர்த்தனே விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube