அரை கிலோ மீட்டருக்கு 8 அடி உயர சுவர்.! ட்ரம்ப் வருகையை முன்னிட்டு அழகுபடுத்தும் பிரதமர் மோடி.!

அரை கிலோ மீட்டருக்கு 8 அடி உயர சுவர்.! ட்ரம்ப் வருகையை முன்னிட்டு அழகுபடுத்தும் பிரதமர் மோடி.!

  • வரும் 24-ம் தேதி 2 நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார் ட்ரம்ப். இவரை வரவேற்க குஜராத்தில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை செல்லும் வழியெங்கும் அழகுபடுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என ட்ரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். இந்த வருகையின்போது ட்ரம்ப்  மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களை சுற்றிப்பார்க்கின்றனர். மேலும் வல்லபாய் படேல் மைதானத்தில் மக்கள் பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வரும் நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிட இருக்கும் நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கவே, அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. ட்ரம்பை வரவேற்க குஜராத்தில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை செல்லும் வழியெங்கும் அழகுபடுத்தப்படுகிறது. அந்தவழியில் உள்ள குடிசை பகுதிகளை மறைத்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 அடி உயரத்திற்கு மதில் சுவர் எழுப்பப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு தற்போது சமூகவலை தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் இதுபோல் வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் மட்டும் சுவர்கள் எழுப்பப்பட்டு, இந்தியாவின் வறுமையை ஒழித்துவிடுகிறார்கள் என்று கூறி வருகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நகராட்சி ஆணையம், குடிசை பகுதிகளை மறைக்க வேண்டிய எண்ணத்தில் சுவர் எழுப்பப்படவில்லை என்றும், ஏற்கனவே பழுதான சுவருக்கு பதிலாக புதிய சுவர் கட்டப்படுகிறது. மேலும் சுவரின் உயரம் 4 அடிக்கு மேல் இருக்காது, இதனால் குடிசைப்பகுதி மறைந்துவிடாது என தெரிவித்தார்.

Latest Posts

மேற்கு வங்கத்தில் மிகவும் அரிய வகை மஞ்சள் நிற ஆமை கண்டெடுப்பு.!
#IPL2020: பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்.. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறுமா பஞ்சாப்?
களைகட்டும் காஜல் அகர்வாலின் திருமணம்.. மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.!
முதல்வர் - ஆளுநர் சந்திப்பு நிறைவு.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
இன்று இந்த சாதனைகளை படைப்பாரா கே எல் ராகுல்..?
ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது! வந்தாலும் மாற்றம் ஏற்படாது! - சீமான்
லாஸ்லியாவிற்கு விரைவில் டும் டும்....
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
ஆளுநரின் ஒப்புதல் காலம் கடந்த முடிவு - திருமாவளவன்
பிரதமரின் 2 நாள் குஜராத் பயணம்.. பல்வேறு திட்டங்கள் துவக்கம்!