8 கோடி பார்வையாளர்களை பெற்றது `வாயாடி பெத்த புள்ள’….படக்குழுவினர் உற்சாகம்…!!

நடிகர் சிவகார்த்திகேயனின் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளராகவும், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளையும் பயன்படுத்தி உருவாக்கிய  படம் `கனா’ இப்படத்தை இயக்கி அறிமுகமாகியுள்ளார்  அருண்ராஜா காமராஜ்.
மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் , சத்தியராஜ்  ,  இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்த இப்படம் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா இணைந்து பாடிய `வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பாடலை இதுவரை 8 கோடிக்கும் அதிகமானோர் யூடியூப்பில் கண்டுகளித்துள்ளனர்.இது ஒரு சாதனை மைல்கல்லாக பார்க்கப்பட்டு பட குழுவினரை மீண்டும் மகிச்சியடைய வைத்துள்ளது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment