தொடர் விபத்தால் “737 மேக்ஸ்” ரக விமான தயாரிப்பு நிறுத்தம்.!

  • சமீபத்தில் “737 மேக்ஸ்” ரக விமானங்கள் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் விபத்து நடந்தது .இதில் 346 பேர் இறந்து உள்ளனர். 
  • இதனால் அனைத்து நாடுகளும்”737 மேக்ஸ்”விமானங்களை இயக்க தடைவிதித்து.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு விமானத்தை தயாரித்து வரும்  “போயிங்” நிறுவனம் தயாரித்த “737 மேக்ஸ்” ரக விமானங்கள் சமீபத்தில் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில்  நடந்த விபத்தில் சிக்கியது. இந்த இரு விபத்துகளிலும் 346 பேர் இறந்து உள்ளனர். இந்த  விமானங்களில் இருந்து ஒரு பயணி கூட உயிர் பிழைக்கவில்லை.

தொடர்ந்து “737 மேக்ஸ்” ரக விமானங்கள் விபத்தில் சிக்கியதால் விமானத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் விமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.இதனால் அனைத்து நாடுகளும்”737 மேக்ஸ்”விமானங்களை இயக்க தடைவிதித்து உள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த தடையை நீக்கி மீண்டும் பயன்பாட்டுக்கு  வந்துவிடலாம் என “போயிங்”நிறுவனம் எண்ணியது. ஆனால் “737 மேக்ஸ்” விமானங்கள் சேவைக்கு அங்கீகரிக்க முடியாது என அமெரிக்க போக்குவரத்து கழகம் கூறியது.இந்த நிலையில் வருகின்ற ஜனவரி மாதம் முதல்  “737 மேக்ஸ்” விமானங்களின் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் என “போயிங்” நிறுவனம் அறிவித்துள்ளது.

author avatar
murugan