கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ரூ 7,15,16,00,000 வாரி வழங்கிய பில்கேட்ஸ் மற்றும் அமெரிக்கா

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இன்று வரை இந்த வைரஸ் பாதிப்பால் 722 உயிரிழந்துள்ளனர் .நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,646 எட்டியுள்ளது . புதியதாக 3,399 கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளனர்.

இதனிடையே உலக சுகாதார அமைப்பு  இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு  குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது . அதன் அவசரநிலைகளுக்கான  தற்செயல் நிதியிலிருந்து  9 மில்லியனைத் கொடுத்தது. WHO வின்  தலைவர் பத்திரிகையாளர்  சந்திப்பில் 24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த  கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்ப்பதற்காக 675 மில்லியன் டாலர்கள் நிதி தேவை என்றும் இதற்க்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று அறிவித்தார். .

WHO வின்  தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை முயற்சிகளுக்கு பில்கேட்ஸ்  மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் 100 மில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாக உறுதியளித்தனர்.

இதனிடையே அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமை 100 மில்லயன் டாலர் அளிப்பதாக  கூறியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை  கையாளும் சீனா மற்றும் பிற நாடுகளுக்கு உதவ அமெரிக்கா 100 மில்லியன் டாலர் அளிப்பதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் ஏற்பட்டு வரும் இந்த உயிரிழப்பு கடந்த 2003 ஆண்டு தாக்கிய சார்ஸ் வைரஸ் பாதிப்பை மிஞ்சும் அளவுக்கு உயிர் பலி அதிகரித்துள்ளது .சார்ஸ் வைரஸால் 2002-2003 சார்ஸ் வைரஸால் சீனா மற்றும் ஹாங்காங் கில் கிட்டத்தட்ட 650 பேரும் ,உலகமுழுவதும் 120 பேர் உயிரழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Castro Murugan