இறந்த மான் வயிற்றில் 7 கிலோ நெகிழிபொருட்கள் மற்றும் உள்ளாடை..!

தாய்லாந்தில் உள்ள வடக்கு பகுதியில் நன் நான் மாகாணம் உள்ளது இந்த மாகாணத்தில் குன் சதான் தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 10 வயது மான் கடந்த திங்கள்கிழமை இழந்துள்ளது.
ஆனால் மானின் உடலில் எந்தவித காயமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்தனர். அப்போது மானின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் பைகள், காபி கப் , ரப்பர் கையுறை, துண்டு , மற்றும் உள்ளாடை என ஏழு கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருட்கள் வயிற்றில் இருந்துள்ளது.
இதனால்தான் இந்த மான் இறந்து இருக்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களை  தடை செய்ய நடவடிக்கை விரைவில் எடுக்க முடிவு செய்திருக்கிறோம் என வனத் துறை வனவிலங்கு பூங்கா இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த வருடம் கடற் பசு குட்டி ஓன்று நெகிழியை உட்கொண்டு இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan