இந்தியா இத்தாலி இடையே 6 முக்கிய துறைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா இத்தாலி இடையே 6 முக்கிய துறைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்து

இத்தாலி பிரதமர் பாலோ ஜென்டிலோனி மற்றும் அவரது மனைவியுடன், அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து,பின் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் வர்த்தகம், எரிசக்தி, தொழில் மேம்பாடு போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள் அமைய உள்ளன.
இருநாடுகளுக்கும் இடையேயான அரசியல் மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க பட்டது. இந்த விவாதம் முடிந்ததும் இரு நாடு பிரதமர்களும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு நிறைவடைந்தஉடன்  , ரயில்வே துறை பாதுகாப்பு, எரிசக்தி, முதலீடுகள், தொழில்மேம்பாடு போன்ற 6 துறைகளில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

 இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகளில் இத்தாலி ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2016-17-ம் நிதியாண்டில் இருநாட்டுக்கும் இடையே 879 கோடி டாலர் மதிப்பு வர்த்தகம் நடை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

490 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியா,  இத்தாலி நாட்டுக்கு  ஏற்றுமதி செய்து வருகிறது. அதேபோல் 389 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை  இந்தியா, இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது. இருநாட்டுக்கும் இடையே உள்ள வர்த்தக பற்றாக்குறை 100 கோடி டாலராக உள்ளது. இது இந்தியாவுக்கு சாதகமாக சூழலலை உருவாக்கி வருகிறது.

நடப்பு நிதியாண்டில் முதல் நான்கு மாதங்களில் இருநாட்டுக்கும் இடையே உள்ள வர்த்தகத்தின் மதிப்பு 322 கோடி டாலர்ஆகும்.. கடந்த பத்தாண்டுகளுக்கு பிறகு இத்தாலி பிரதமர் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *