நேரடி நெல் விதைப்பு சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக ஏக்கருக்கு ரூ.600 மானியம்-முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

நேரடி நெல் விதைப்பு சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக ஏக்கருக்கு ரூ.600 மானியம் வழங்க  உத்தரவு பிறப்பித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில்,காவிரி டெல்டா விவசாயிகள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

மேட்டூர் அணையில்  சமீபத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.

5,00,000 ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்குவதற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. நேரடி நெல் விதைப்பு சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக ஏக்கருக்கு ரூ.600 மானியம் வழங்க  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்