உங்களது ஸ்மார்ட் போனில் இந்த 6 விஷயங்களை செய்தால் அவ்வளவு தான்!

Just do these 6 things on your smart phone!

ரொம்ப நாட்கள் ஆசை வைத்து நாம் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட் போன் வாங்கி இருப்போம். தரையில் படாத அளவிற்கு இதனை அவ்வளவு பத்திரமாக பார்த்து கொள்வோம். இப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட் போனில் நாம் ஒரு சில தவறான விஷயங்களை செய்து வருகின்றோம். இது போன்ற செயல்களை நாம் தொடர்ந்து செய்து வந்தால் ஸ்மார்ட் போனை குப்பையில் போட வேண்டியது தான். இனி நாம் செய்ய கூடிய தவறான செயல்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து கொண்டு, தவிர்ப்போம். #1 எப்போதுமே recent apps-யை நம் க்ளியர் செய்து கொண்டே இருப்போம். இது போன்று செய்வது அந்த அளவிற்கு சரியானதல்ல. recent apps-களை அப்படியே ஒரு நாளின் இறுதியில் க்ளியர் செய்தாலே போதும். வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மூன்று முறை க்ளியர் செய்து கொள்ளலாம். #2 குப்பை போல குவிந்து கிடக்கும் ஆப்ஸ்களில் மிக அப்பட்டமான பொய் Battery Saver என்கிற ஆப்ஸ்கள் தான். இவை பேட்டரியை ஒரு போதும் சேவ் செய்ய பயன்படுத்துவதிலை என்பதே உண்மை. ஆதலால் இந்த வகை ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யாதீர்..! #3 உங்களது மொபைலை வாரத்திற்கு ஒரு முறையாவது Restart செய்து பயன்படுத்த வேண்டும். எப்படி கணினி, தொலைக்காட்சி போன்றவற்றை அடிக்கடி முழுவதுமாக அணைத்து விட்டு பயன்படுத்துகிறமோ, அதே போன்று ஸ்மார்ட் போனையும் வாரத்திற்கு ஒரு முறையேனும் Restart அல்லது Reboot செய்யலாம். #4 மொபைலை கிளீன் செய்ய கூடிய ஆப்ஸ்களை ஒரு போதும் பதிவிறக்கம் செய்ய கூடாது. இவை அனைத்துமே நம்மை முட்டாளாக்க கூடியவை. இந்த ஆப்ஸ்கள் உங்களது மொபைலில் உள்ள டேட்டாவை திருடி கொள்ளுமே தவிர வேறு எதையும் செய்து விடுவதில்லை. #5 மொபைலில் இன்ஸ்டால் செய்ய கூடிய ஆப்ஸ்களுக்கு எல்லா வகையான Permission-களையும் தந்து விடாதீர்கள். எடுத்துக்காட்டாக ஒரு வங்கி கணக்குகள் ஆப் பதிவிறக்கம் செய்யும் போது அவை கேமரா, மற்றும் உங்கள் லொக்கேஷனை டிக் செய்ய கூறினால் செய்யாதீர்கள். இவை உங்களின் தகவலை திருட கூடிய சூழ்ச்சியாகும். #6 நமக்கு வாட்சாப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஏதேனும் போலியான செய்துயை பகிர சொன்னால் ஒரு போதும் அப்படி செய்து விடாதீர். ஏனெனில், இது போன்று வர கூடிய லிங்க்ஸ் மற்றும் போலி செய்திகளை க்ளிக் செய்தால் நம் மொபைல் ஹேக் செய்யப்பட கூடும்.