5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து -தமிழக அரசு அரசாணை வெளியீடு

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து -தமிழக அரசு அரசாணை வெளியீடு

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று செப்டம்பர்  13-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாக புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண் அடிப்படையில் தான் எழுத்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அமையும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டினர்.இதன் பின்பு 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கையில், 5, 8ஆம் வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக 13.09.2019 அன்று பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.அவற்றை மாண்புமிகு அம்மாவின் அரசு கவனமுடன் பரிசீலித்து,இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.எனவே ,ஏற்கனவே  உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்வு ரத்து செய்யப்படும் என அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதாவது ,இதற்காக செப்டம்பர்  13-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாக புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Join our channel google news Youtube