தமிழகத்தில்  6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல்

தமிழகத்தில்  6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மருத்துவ வசதி குறைவாக உள்ள மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.அதில், தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.