எந்த அடிப்படையில் மதிப்பெண்.!?5-8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

எந்த அடிப்படையில் மதிப்பெண்.!?5-8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 • தமிழகம் முழுவதும் 5,8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டு முதல் நடைபெறுகிறது.
 • மாணவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்குத்தான் எழுத்து தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 • தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 60 மதிப்பெண் அடிப்படையில் தான் எழுத்து தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளித்துறை ஆணையர் சிஜிதாமஸ் வெளியிட்ட அறிக்கையில்  தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைகளானது கடந்த 2012-13ம் ஆண்டு முதல் நடைமுறையில்  உள்ள முறைகளின் கீழ் வளரறி (Formative Assessment) மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண் மற்றும் தொகுத்தறி (Summative Assessment) மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மதிப்பெண் முறைகளில் வளரறி மதிப்பீடு என்பது FA+FB என இரண்டு வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றது. FA வில் புராஜெக்ட் மற்றும் மாதிரிகள் வடிவமைத்தல், செயல்பாடுகள் ஆகியவைகளுக்கு பள்ளி பாட ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.அதே போல்FBயின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திலும் சிறு தேர்வுகள் நடத்தி மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுக்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொகுத்தறி மதிப்பில் நடத்தப்படும் பாடப்பகுதியில் இருந்து கேள்வித்தாள் தயாரித்து பள்ளி  அல்லது வட்டார மற்றும் மாவட்ட அளவில் கேள்வித்தாள் தயாரித்து  60 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு  வருகிறது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5, 8ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி பொதுத் தேர்வின்போது கடந்த 22.10.2019ம் தேதியில் அறிவித்தபடி FA, FBல் வழங்கப்பட்ட 40 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தொகுத்தறிவு முறையின் கீழ் வழங்கப்பட உள்ள 60 மதிப்பெண்களுக்கான தேர்வுக்குரிய கேள்வித்தாள்கள் அரசுத் தேர்வுத்துறையால் தயாரிக்கப்படும் அவ்வாறு தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகளின் விடைத்தாள்கள் அந்தந்த சிஆர்சி மைய அளவில் மாற்றி அனுப்பி அதில் திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல்கள் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்த அவர் மேலும், 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க கூடாது என்று அரசு ஆணையிட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்று பள்ளித்துறை ஆணையர் சிஜிதாமஸ் தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.]]>

  Latest Posts

  பாலியல் குற்றம்-ஈடுபட்டாலே பிறப்புறுப்பு அகற்றம்! நைஜீரியா அதிரடி சட்டம்..
  யாஷிகாவின் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம்...!
  விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடை... தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார்...
  அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!
  அடுத்த வாரம் பருவமழை திரும்ப பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  கிசான் முறைகேடு : பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - சிபிசிஐடி
  #எல்லாம் உயிர்தாங்க-வயிற்றில் இறந்த 4குட்டிகள்..போராடிய தாய்!காப்பாற்றிய கருணை மக்கள்!
  #இறுதியாண்டு தேர்வு-பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!
  நவாஸ்க்கு பிடிவாரன்ட்! பாக்.,அரசு தீவிரம்
  #அதிரடி விலகலே ஒரு நாடகம்- நடிக்காதீர்கள்!காங்.,கடும்தாக்கு