கோவிட் அதிகாரி என்று கூறி 54,000 கொள்ளையடித்தவர் கைது!

கோவிட் ஆபீசர்கள் என்று கூறி 54 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த போலி நபர்களை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 30 ஆம் தேதி சோஹன் வாக்கர் என்னும் 23 வயதுடைய ஒரு இளைஞர் அவரது கூட்டாளி உடன் செம்பூர் ரயில் நிலையம் அருகில் வந்து, அப்துல் ஷேக் என்பவரிடம் தாங்கள் கோவிட் அதிகாரிகள் என்று கூறி அவர் மீது குற்றம் சாட்டி 54 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பின் அவர்கள் உண்மையான அதிகாரிகள் இல்லை என்று அறிந்த அப்துல் ஷேக் காவலர்கள் உதவியுடன், அவரது பையில் இருந்த ஏடிஎம் கார்டை எடுத்து அவரது 54 ஆயிரத்தை திரும்பப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் செம்பூர் காவல் நிலைய அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது கூட்டாளி வந்த காரின் எண்ணை குறித்துக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை சுனாபட்டி என்பவரின் வீட்டில் இருந்த வாக்கர் மற்றும் கூட்டாளிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவர் அல்ல மேலும் பலர் கொரோனாவின் பரவல் அதிகரிப்பை வைத்து மோசடி செய்து வருகிறார்கள் எனவும், கோவிட் அதிகாரி என்று தங்களை காட்டிக் கொண்டு சுற்றியது இதுவே முதல் முறை என்றும் மேலும் சீயோன் நேரு நகர் ஆகிய பகுதிகளிலும் இவருக்கு எதிராக வழக்குகள் உள்ளது என்று செம்பூர் காவல் நிலைய அதிகாரிகள் போலீசார் கூறியுள்ளனர்.

author avatar
Rebekal