48 வருட கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மகத்தான சாதனை!! ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து இந்தியா தான் மாஸ்! பட்டியல் உள்ளே!!

  • 1971 முதல் ஒருநாள் போட்டியில் நடைபெற்று வருகிறது
  • ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தற்போது தனது 500வது வெற்றியை பதிவு செய்துள்ளது

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை சென்ற இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தமிழக வீரர் விஜய் சங்கர் ஒரு மிகப்பெரிய காரணமாக அமைந்தார்.

இதன் மூலம் தனது 500வது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி. மேலும், இந்த சாதனையை செய்த இரண்டாவது அணி இந்தியா ஆகும். ஆஸ்திரேலியா அணி இதற்கு முன்னதாக 558 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது 963 ஒருநாள் போட்டிகளில் ஆடி 500 வெற்றி 414 தோல்வி 40 ஆட்டங்களில் முடிவு இல்லாமல், 9 டை கண்டுள்ளது.

author avatar
Srimahath

Leave a Comment