பசியுடன் தவிப்பவர்களுக்கு திருப்பதியில் 50 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள்!

கொரோனா வைரஸ் காரணமாக தற்பொழுது இந்தியாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உணவின்றி, வேலை  இன்றி ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் பல கோவில்களில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், தற்போது திருப்பதியில் பலர் உணவு கிடைக்காமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் உணவில்லாமல் இருப்பவர்களுக்காக நேற்று மதியம் மட்டும் 15,000 உணவு பாக்கெட்டுகளை கொடுத்துள்ளனர். 

இரவு 20,000 உணவு பாக்கெட்டுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல 50000 உணவு பாக்கெட்டுகள் ஒவ்வொரு வேளையும் வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடந்த தன்வந்திரி யாகத்தின் மூலம் வைரஸ் பாதிப்பில் இருந்து வெளியேறி மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என்று மக்கள் வேண்டி வருகின்றனர். அங்கு உள்ள அனைவருக்கும் உணவு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

author avatar
Rebekal