இன்னும் 50 ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் அழிந்துவிடும் அபாயம்….BSLI ஆய்வு

புதுடில்லி: அடுத்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் தற்போது பேசப்பட்டு வரும் மொழிகளில் பாதிக்கும் மேல் அழிந்து விடும் அபாயம் உள்ளது என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு: இதுகுறித்து ‛பீப்புல் லிங்கிஸ்டிக் சர்வே ஆப் இந்தியா(பி.எஸ்.எல்.ஐ.,)’ எனும் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டதாவது: இந்தியா முழுவதும் வசிக்கும் மக்களால் 780 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அடுத்த 50 ஆண்டுகளில் இவற்றில் 400க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது. பழங்குடியின மொழிகள்: கல்வியறிவின்மை மற்றும் பள்ளி செல்லாத காரணத்தால், பழங்குடியின மக்கள் பேசும் மொழிகளுக்கு அழியும் ஆபத்து அதிகம் உள்ளது. இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆயிரம் வருடம் பழமையான மைதிலி(பீகார் பழங்குடியினர் மொழி) உள்ளிட்ட 22 பழங்குடியின மொழிகள் அழியும் அபாயம் உள்ளது. அழிந்தது 250.. கடந்த 50 ஆண்டுகளில் 250 இந்திய மொழிகள் அழிந்து விட்டது. இவ்வாறு அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

author avatar
Castro Murugan

Leave a Comment