கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது பதான் கோட் நீதிமன்றம்.
ஜம்முவின் கத்துவா மாவட்டத்தில் கோயிலில் வைத்து 8 வயது சிறுமி கொடூரமாக பல நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சிறார் உட்பட 8 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கின் விசாரணை பஞ்சாப்பில் உள்ள பதான் கோட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று பதான் கோட் நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பு வழங்கியது.அதன்படி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பதான் கோட் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதன் பின்னர் தண்டனை விவரம் மதியம் அறிவிப்பதாக தெரிவித்தது.இந்நிலையில் தற்போது  சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது பதான் கோட் நீதிமன்றம்.அதன்படி ஊர் தலைவரும் பூசாரியுமான சஞ்சி ராம் ,தீபக், பர்வேஸ் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது பதான் கோட் நீதிமன்றம்.மேலும் உதவி காவல் ஆய்வாளர் ஆனந்த தத்தா, சுரேந்தர் வர்மா, தலைமைக் காவலர் திலக் ராஜ் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊர் தலைவரும் பூசாரியுமான சஞ்சி ராமின் மகன் விஷாலை விடுவித்து  தீர்ப்பு வழங்கியுள்ளது பதான் கோட் நீதிமன்றம்.