பெற்றோர்களிடம் குழந்தைகள் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்

குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையேயான உறவு நண்பர்களுக்கு இடையே உள்ள உறவு போல் இருக்க வேண்டும்.

முதலில் குழந்தைகளிடம் பெற்றோர்கள் நண்பன் போல் நடந்து கொள்ள வேண்டும். அதே சமயம் கண்டிக்கும் நேரங்களில் ஆசானாக இருக்க வேண்டும். அவர்கள் அறியாமல் எதுவும் செய்தாலும் அந்த தவறை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும்.

குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்:

குழந்தைகள் பெற்றோர்களிடம் பல விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள்.அதில் முக்கியமான ஐந்து எதிர்பார்ப்புகளை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.

அன்பு காட்டுதல் :

குழந்தைகள் முதலில் அன்பை எதிர்பார்ப்பது பெற்றோரிடமே எனவே குழந்தைகளை முதலில் அன்பு செய்யுங்கள். அது உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள உறவை  வலுப்படுத்த உதவியாக இருக்கும்.பெற்றோர்கள் அன்பு செலுத்தாத பிறரிடம் குழந்தை அன்பிற்காக ஏங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். சில பெற்றோர்கள் கோபத்தில் இருக்கும் போது குழந்தைகள் வந்து அவர்களிடம் பேசினால் அந்த கோபம் முழுவதையும் குழந்தைகளின் மீது காட்டுவார்கள். எனவே குழந்தைகளிடம் பேசும் போது மிகவும் கவனமாக பேச வேண்டும்.

எடுத்து கூறுதல் :

 

 

குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் அதனை கண்டிக்கும் முழு பொறுப்பும் பெற்றோர்களை சார்ந்தது. எனவே அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி திருத்த முயல்வது நல்லது. அவர்கள் செய்யும் தவறுகள் மூலமாக  வரும் விளைவுகளை எடுத்து கூறியும் திருத்த முயல்வதும் சிறந்தது.தவறுகளை நாம் அன்பாக கூறும் போது குழந்தைகள் கேட்டு கொள்வார்கள்.

  திறமைகளை ஊக்குவிப்பது :

 

குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிப்பது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி குழந்தைகளின் திறமைக்கு ஏற்றவாறு அவர்களை வழிநடத்துவது. நமது பெற்றோர்கள் நம்மை எப்போதும் வழிநடத்துவார்கள். சில குழந்தைகள் நன்றாக பாடுவார்கள்.சில குழந்தைகள் நடனம், ஓவியம்,ஆராய்ச்சி என பல திறமைகள் இருக்கும்.

இவ்வாறு அவர்களின் திறமைகளுக்கு ஏற்றவாறு குழந்தைகளை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வது முதலியவைகள் நமது குழந்தைக்கு மிகவும் பிடிக்கும்.

குழந்தைகளிடம் நீ இதைதான் செய்ய வேண்டும் கட்டாய படுத்த கூடாது.அதனை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

பாராட்டுதல் :

குழந்தைகளை வெகுவாக கவர்வதற்கு பாராட்டுதல் மிக சிறந்த காரணியாகும்.குழந்தைகள் நம்மிடம் விரும்புவதும் அதை தான். குழந்தைகள் சிறியதாக ஏதாவது ஒரு விஷயம் செய்தாலும் அவர்களை பாராட்டி பேசினால் பாராட்டு வாங்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் தவறு செய்ய கூடாது என்று நினைப்பார்கள்.

எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது :

 

குழந்தைகள் எதை கேட்டாலும் அதனைவாங்கி கொடுத்து விடுங்கள்.அவ்வாறு நாம் செய்யா விட்டால் அவர்கள் நம் மீது கோபப்படுவார்கள். அப்போது தான் குழந்தைகள் நமது பெற்றோர்கள் நமக்கு நன்மையைதான் செய்வார்கள் என்ற எண்ணம் தோன்றும்.

குழந்தைகள் கேட்ட பொருட்கள் தேவை இல்லாத பொருளாக கூட இருக்கலாம். அதை நாம் வாங்கி கொடுத்த பின்பு அதில் என்ன நன்மை இருக்கிறது,மேலும் தீமைகள் என்னென்ன இருக்கிறது என்பதை உணர்த்தினால் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

குழந்தைகள் நமது தேவையை நிறைவேற்றும் பெற்றோர்களாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களின் மனதில் தோன்றும்.

 

Leave a Comment