திண்டுக்கல்லில் 5 பைசா ,10 பைசாவிற்கு பிரியாணி , டி-ஷர்ட் ..!

தமிழகத்தில் சமீப சில நாட்களாக பழைய நாணயங்களை மக்கள் மத்தியில் எடுத்து செய்கின்றனர்

By murugan | Published: Oct 24, 2019 07:35 AM

தமிழகத்தில் சமீப சில நாட்களாக பழைய நாணயங்களை மக்கள் மத்தியில் எடுத்து செய்கின்றனர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள். நேற்று திண்டுக்கல் சந்து கடை பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் பழைய பத்து பைசா நாணயம் கொடுத்தால் 150 ரூபாய் மதிப்பு தக்க ஒரு டி-ஷர்ட்  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று காலை முதலே அந்த கடையின் முன்பு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்து பைசா நாணயத்துடன் குவிந்தனர். இதில் முதல் 200 பேருக்கு டி-ஷர்ட் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி இந்த துணிக்கடை சார்பில் 200 பொதுமக்களுக்கு டோக்கன் கொடுத்து கடை சார்பில் டி-ஷர்ட் வழங்கப்பட்டது. இதுகுறித்து அக்கடையின் உரிமையாளர் கூறுகையில் , பழைய நினைவுகளை புதுப்பிக்கும் முயற்சியில் இதை செய்து வருகிறோம். அதனால்தான் 10 பைசாவிற்கு டி-ஷர்ட்டை கொடுத்ததாக அவர் தெரிவித்தார். ஒரு வாரத்திற்கு முன் கடந்த ஒரு வாரத்திற்கு முன் உலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஒரு பிரியாணி கடையில் பழைய ஐந்து பைசா நாணயத்திற்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc