தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா..690 லிருந்து 738 ஆக உயர்வு – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 690 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 738 ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 48 பேரில் 42 பேருக்கு ஒரே தொற்று என்றும் அதில் 8 பேர் ஒரே குழுவாக டெல்லி சென்று வந்தவர்கள். இவர்கள் மூலமாக 33 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் 4 பேர் சென்னை மற்றும் ஒருவர் வெளிநாடு சென்று வந்தவர் என மொத்தம் 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழந்து, 8 ஆக அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 60,739 பேரும், அரசு கண்காணிப்பில் 230 பேர் இருக்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 6,095 மாதிரிகள் பரிசோதனை செய்யப்டுள்ளது. இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 32,075 பேர் வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டதில் 21 பேர் குணமடைந்துள்ளார்கள். பின்னர் 344 பேரின் முடிவு வரவேண்டி இருக்கிறது என்றும் தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்கள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் போதிய முகக்கவசங்கள் கைவசம் இருக்குறது என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்