சமையல் அறையில் இருந்த ஓவியத்திற்கு ரூ.46,55,52,892 கோடியா..? உறைந்து போன 90 வயது மூதாட்டி ..!

சமையல் அறையில் இருந்த ஓவியத்திற்கு ரூ.46,55,52,892 கோடியா..? உறைந்து போன 90 வயது மூதாட்டி ..!

பிரான்சில் உள்ள காம்பிக்னே நகரை சேர்ந்த தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் தனது வீட்டை விற்க முடிவு செய்தார். இந்த வீடு 1960-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த வீடாகும். இதைத்தொடர்ந்து அந்த நகரில் உள்ள ஏல அதிகாரிகளிடம் தனது வீட்டை விற்க வேண்டும் என கூறியுள்ளார் அந்த மூதாட்டி. இதை தொடர்ந்து  ஏல அதிகாரிகள் மூதாட்டி வீட்டில் உள்ள மரபொருள்களை ஆய்வு செய்தனர். அப்போது சமையலறையில் எரிவாயு அடுப்பிற்கு மேலே  ஒரு பழமை  வாய்ந்த ஓவியம் ஒன்று இருந்தது. அதை பார்த்த அதிகாரிகள் ஓவியத்தை பற்றி பாட்டியிடம் கேட்டபோது இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும்  வேறு இடமில்லாமல் இந்த இடத்தில்  மாட்டி  வைத்துள்ளேன் என அவர் கூறினார். இதையடுத்து அந்த அதிகாரிகள் அந்த ஓவியத்தை ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஓவியம் 13-ம்  நூற்றாண்டில் இத்தாலிய ஓவியரான சிமாய்பூ  என்பவரால் வரையப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் இங்கு ஓவியத்தின் மதிப்பு சுமார் 6 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.46,55,52,892 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் கூறினர். இதைக்கேட்ட மூதாட்டிக்கு இன்பஅதிர்ச்சி உறைந்து போனார். அந்த ஓவியத்தை அடுத்த மாதம் அக்டோபர் 27-ஆம் தேதி ஏலத்தில் விற்பனை செய்ய உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Latest Posts

பனையூரில் விஜய் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..???
சமூக அநீதி தேர்வுகளில் தொடர்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!
நலமோடு இருக்கிறேன்-அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவிப்பு
சற்று நேரத்தில் டிக்கெட் முன்பதிவு..முந்துங்கள்
செல்போனை தர மறுத்த மனைவியை கோடரியால் கொலை செய்த கொடூர கணவன்!
தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்!
காஷ்மீர் பகுதியில் பாக்., திடீர் தாக்குதல்... இந்திய இராணுவம் தக்க பதிலடி...
வரும் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு... துணை முதல்வர் தகவல்....
எதிரி நாட்டு கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி....