9-வது நாள் நவராத்திரி விழா.! ஏழுமலையானுக்கு காணிக்கையாக 12.48கோடி ரூபாய்.!

9-வது நாள் நவராத்திரி விழா.! ஏழுமலையானுக்கு காணிக்கையாக 12.48கோடி ரூபாய்.!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9 வது நாளில் 12 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், கடந்த 9 நாட்களில் திருப்பதியில் 1லட்சத்து 57ஆயிரத்து 966 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும், அதில் 50,791பேர் தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், கோவிலில் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி வழங்க கோரி திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அதனை குறித்த முடிவை இன்னும் இரண்டு தினங்களில் எடுக்கப்படும் என்று தேவஸ்தான முதன்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube