10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 43 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படும்.!

ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், 43 லட்சம் முகக்கவசங்கள் வழங்கபடும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. 

தற்போது ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், பொதுத்தேர்வு ஏழுதும் 10, 11, +2 மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 43 லட்சம் முகக்கவசங்கள் வழங்கபடும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும். 

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.