சர்வேதேச போட்டியில் 400 சிக்ஸர்கள்..! புதிய சாதனை படைக்க உள்ள ஹிட்மேன்..!

இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தும் ரோஹித் சர்வதேச போட்டிகளில் 400 சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் இடம்பெற உள்ளார்.
ரோஹித் இதுவரை சர்வதேச போட்டிகளில் 398 சிக்ஸர் விளாசி உள்ளார்.அதில் ஒருநாள் போட்டிகளில் 232 , டெஸ்ட் போட்டிகளில் 51 , டி 20 போட்டிகளில் 115 சிக்ஸர் விளாசி உள்ளார். இந்நிலையில் ரோஹித் இன்றைய போட்டியில் 2 சிக்ஸர் மட்டும் அடித்தால் சர்வதேச போட்டிகளில் 400 சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் இணைந்து விடுவார்.
இதுவரை 400 சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி 476 , வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 534 சிக்ஸர்களை விளாசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan