இந்திய அணிக்கு 40 சதவிகிதம் அபராதம்.! குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட கேப்டன்.!

இந்திய அணிக்கு 40 சதவிகிதம் அபராதம்.! குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட கேப்டன்.!

  • இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
  • இந்நிலையில் இந்த போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதாக 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் முதலில் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி நேற்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி ஏற்கனவே 3 போட்டிகளில் வெற்றி பெற்று 4-வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என காலம் கண்டது. பின்னர் நியூசிலாந்து அணி சொந்த மண்ணியில் வெற்றி பெற வேண்டும் என்றும், இருஅணிகள் மோதின. ஆட்டம் இறுதியில் சமனியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஓவர் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று 4:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், வெலிங்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்த்தை விட பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதாக 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை கள நடுவர்கள் கிறிஸ் பிரவுன், ஷான் ஹெய்க் மற்றும் மூன்றாவது நடுவர் ஆஷ்லே மெஹ்ரோத்ரா ஆகியோர் குற்றச்சாட்டுகளை வைத்தனர். இந்த குற்றச்சாட்டை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் ஓப்புக்கொண்டுள்ளதால் அடுத்தக்கட்ட விசாரணை தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நாளை நடைபெறும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube