4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு..!தொழிலாளியை மரத்தில் வைத்து அடிஉதை ..!

4-year-old girl sexually assaulted

திருப்பூர் கோல்டன்  நகரைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சார்ந்த கந்தசாமி(34) என்பவர் நேற்று காலை மதுபோதையில் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்த சிறுமியை காணவில்லை என்பதால் பெற்றோர்கள் தேடினர். அப்போது  கந்தசாமி வீட்டில் இருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டது.உடனே கந்தசாமி வீட்டிற்கு  சென்ற அந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்து கொண்டு இருந்தது தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் கந்தசாமியை  மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கந்தசாமியை  கைது செய்தனர்.

A 4-year-old girl from the Golden City of Tirupur was playing near her home. The neighbor, Kandasamy, 34, had sexually assaulted the girl, who was playing near her home in Madurai yesterday morning. Parents searched because the little girl who was playing near the house was missing. The girl was heard crying from Kandaswamy's house. It was revealed that the girl's parents had sexually harassed the girl. Furious parents and neighbors tied Kandasamy to the tree and attacked him with a string. Kandasamy was arrested by the police who came to know the incident.